ஆர்யாவை மீண்டும் இயக்கும் விஜய்
முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வந்த விஜய் முதல்முறையாக சைவம் என்ற படத்தை முன்னணி நடிகர்கள் இல்லாமல் உருவாக்கியுள்ளார். தெய்வத்திருமகள் சாராதான் இப்படத்தின் முக்கிய நட்சத்திரம்.
விருதை குறி வைத்து எடுத்திருக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனது பழைய ட்ராக்குக்கு விஜய் திரும்பவுள்ளார். ஆம், அடுத்து அவர் இயக்குவது ஆர்யாவை என்கிறது கோடம்பாக்க செய்தி.
மதராசப்பட்டணத்தில் ஏற்கனவே ஆர்யாவும், விஜய்யும் இணைந்து பணியாற்றினர். இப்போது மீண்டும். படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலை ஏறக்குறைய முடிவடைந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
படம் குறித்த பிற விவரங்கள் விரைவில்.
விஷ்ணுவர்தனும் ஆர்யா நடிக்கும் படத்தைதான் அடுத்து எடுக்க உள்ளார். தற்போது புறம்போக்கு, மீகாமன் படங்களில் ஆர்யா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment