திருட்டுத்தனமாக வெளியான வாலு பாடல்கள்

No comments
வாலு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்து வரும் படம் வாலு. விஜய் சந்தர் இயக்க, தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் காதலர் தினத்தில் வெளியாகும் என்று கூறியிருந்தனர். ஆனால் பல காரணங்களால் அன்று பாடல்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் படத்தின் அனைத்துப் பாடல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. 
 திருட்டுத்தனமாக வெளியிடப்படும் பாடல்களின் தரம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஆனால் வாலு படத்தின் பாடல்கள் ஒரிஜினல் அளவுக்கு சிறப்பாக இருப்பதால் படம் சம்பந்தப்பட்ட யாரோதான் பாடல்களை வெளியிட்டிருப்பார்கள் என விஜய் சந்தர் கூறியுள்ளார்.
 இதற்கு முன் பிரியாணி படத்தின் பாடல்கள் இப்படி வெளியாயின. பாடல்கள் வெளியாகி சில தினங்கள் கழித்து அது பற்றி புகார் தந்தனர். இப்போதும் பாடல்கள் வெளியாகியுள்ளன. கூட்டிக்கழித்துப் பார்த்தால் சம்பந்தப்பட்டவர்களே பாடலை இணையத்தில் வெளியிடுகிறார்களோ என சந்தேகம் எழுகிறது.

No comments :

Post a Comment