15 வருடமாக காத்திருந்தவருக்கு கால்சீட் கொடுத்த ரஜினி!

No comments
கோச்சடையானுக்குப்பிறகு ரஜினி யார் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. என்றாலும், கே.எஸ்.ரவிக்குமார். ஷங்கர் என சிலரது பெயர்கள் அடிபட்டுக்கொண்டேயிருக்கிறது. ஆனால் ரஜினி தரப்போ, கோச்சடையான் ரிலீசுக்குப்பிறகுதான் அடுத்தப் படத்தைப்பற்றி வாய் திறப்பது என்பதில் உறுதியாக இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், அடுத்த படத்தை இயக்குபவர் பற்றி எதுவும் சொல்லாத ரஜினி, தனது அடுத்த படத்தை தயாரிக்கயிருப்பது கர்நாடகத்தைச்சேர்ந்த ராக்லைன் வெங்கடேஷ் என்பதை கூறியுள்ளாராம். 
கன்னடத்தில் படங்கள் தயாரித்து வரும் இவர், தமிழில் விக்ரம் நடித்த மஜா என்ற படத்தை தயாரித்தவர். ஆனால் அதற்கு முன்பிருந்தே சுமார் 15 ஆண்டுகளாக ரஜினியிடம் கால்சீட் கேட்டு வருகிறாராம். அப்போது, சரியான நேரம் வரும்போது நானே அழைக்கிறேன் என்று சொல்லியிருந்த ரஜினி, இப்போது அதற்கான சூழல் வந்திருப்பதால், தனது அடுத்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை அவரிடமே விட்டிருக்கிறாராம். 
 ரஜினியின் இந்த முடிவினால், அடுத்து அவர் நடிக்கிற படத்தை தயாரிப்பதற்கு தயார் நிலையில் இருந்த சில முன்னணி கோலிவுட் பட நிறுவனங்கள் ஏமாற்றமடைந்துள்ளன.

No comments :

Post a Comment