ஹீரோயிச கொள்கையை கைவிட்ட காஜல்அகர்வால்!

No comments
சினிமாவில் நடிக்க வந்த காலங்களில் பகலில் ஒரு படத்தில் நடித்தால், இரவில் இன்னொரு படத்தில் நடிப்பார் காஜல்அகர்வால். அதோடு, படாதிபதிகள் கேட்கிற தேதிகளில் கால்சீட் கொடுப்பார். ஆனால், பின்னர் ஓரளவு பெரிய நடிகையான பிறகு இரவு கண் விழித்து நடிப்பதை தவிர்க்கத் தொடங்கினார். ஓய்வில்லாமல் நடிப்பதையும் தவிர்த்து வருகிறார். தற்போது தெலுங்கில் 3 படங்களில் நடிக்கும் காஜல், தமிழில் காதலில் சொதப்புவது எப்படி பாலாஜி மோகன் இயக்கும் படத்திற்கு கால்சீட் கொடுத்திருப்பவர், காலை 9 மணிக்கு ஸ்பாட்டுக்கு வரும் நான் 6 அடித்ததும் வெளியேறி விடுவேன். அதன்பிறகு அஞ்சு நிமிசம்கூட தாமதிக்க மாட்டேன். 
அதற்கு என் உடம்பு ஒத்துழைப்பு கொடுத்தாலும் மனம் ஒத்துழைக்காது என்கிறார். காரணம், இப்போதெல்லாம் எனக்கு நிறைய ரிலாக்ஸ் தேவைப்படுகிறது. அதோடு, அழுத்தமான கதைகளில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று மனசு சொல்கிறது. 
அதனால் கிடைக்கிற படங்களில் எல்லாம் நடிப்போம் என்றில்லாமல் செலக்டீவான கதைகளாக மட்டுமே நடிக்க ஒத்துக்கொள்கிறேன் என்று சொல்லும் காஜல், இனிமேல் ஹீரோயிசத்தை கருத்தில் கொள்ளாமல் தனது திறமையை வெளிச்சம் போடும் கதைகளாக இருந்தால் எந்த மாதிரியாக ஹீரோக்களுடனும் நடிப்பேன் என்று தனது ஹீரோயிச கொள்கையை திடீரென்று தளர்த்தியிருக்கிறார். காஜலின் இந்த புதிய கொள்கைக்கு ஆந்திராவில் ஆதரவு கிடைக்காதபோதும், கோலிவுட்டில் ஆதரவு பெருகி வருகிறது.

No comments :

Post a Comment