அண்ணன் தனுசை அசர வைத்த தம்பி சிவகார்த்திகேயன்!

No comments
சிவகார்த்திகேயனை தான் நடித்த 3 படத்தில் தனது நண்பனாக அறிமுகப்படுத்தியவர் தனுஷ். அதையடுத்துதான் பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் கதாநாயகனாக நடித்தார் சிவகார்த்திகேயன். ஆனால் அதன்பிறகு தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனையே நடிக்க வைத்தார் தனுஷ். அந்த படம் சிவகார்த்திகேயனுக்கு பெரிய ஹிட்டாக அமைந்ததோடு, மார்க்கெட்டில் அவரது தரத்தை உயர்த்தியது. அதனால் அதிலிருந்து தனுஷை தனது அண்ணனாக ஏற்றுக்கொண்டார் சிவகார்த்திகேயன். அதேபோல் தனுசும் சிவகார்த்திகேயனை தனது தம்பியாக ஏற்றுக்கொண்டார். 
ஆக, அவர்களது அண்ணன்-தம்பி உறவு தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில், மீண்டும் தனது தம்பியாகிய சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை தயாரிக்கிறார் தனுஷ். இன்றைய நிலையில் பல முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களையே போட்டு பார்த்த பிறகுதான் விலை பேசுகிறார்கள் விநியோகஸ்தர்கள். 
ஆனால், சிவகார்த்திகேயன் படத்தை இன்னமும் தனுஷ் தொடங்காதபோதே, சிலர் அவரை அணுகி, விலை பேசுவதோடு, பாதி பணத்தை இப்போதே தந்து விடுகிறோம் என்கிறார்களாம். ஆக, தம்பியின் இந்த அசுர வளர்ச்சியைக்கண்டு அசந்து நிற்கிறார் தனுஷ்.

No comments :

Post a Comment