கொடூர கொலைகாரனாக டேனியல் பாலாஜி!
ஸ்ரீகாந்த் நடித்த ஏப்ரல் மாதத்திலே படத்தில் அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. அதையடுத்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் என பல படங்களில் நடித்த அவர், தற்போது ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருக்கும் படம் மறுமுகம். திரைப்பட கல்லூரி மாணவர் கமல் சுப்பிரமணியம் இயக்கியுள்ளார்.
சிற்பியாக டேனியல் பாலாஜி நடித்துள்ள இப்படத்தில் முதல் பாதியில் ஒரு முகம். இரண்டாவது பாதியில் இன்னொரு முகம் என இரண்டு மாறுபட்ட கோணங்களில் அவர் நடித்துள்ளாராம்.
ஆனால், அவரது இரண்டாவது முகம் மிக கொடூரமானதாக சித்தரிக்கப்பட்டுள்ளதாம. அதற்காகத்தான் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாம் தணிக்கைக்குழு.
அப்படியென்றால் படத்தில் கிளாமர் அல்லது வன்முறைகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதோ? என்று பட டைரக்டர் கமல் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, படத்தில் கிளாமர் அளவோடுதான் இருக்கும். ஆனால், டேனியல் பாலாஜி நடித்திருக்கு கேரக்டர் ரொம்ப பயங்கரமானது. கதைப்படி அவர் சில கொலைகளை செய்கிறார். அதுவும் கொடூரமான முறையில் செய்கிறார்.
அதை எதற்காக செய்கிறார் என்பதுதான் கதை.
இதற்கு முன்பு தமிழில் பல த்ரில்லர் படங்கள் வந்திருந்தபோதும், இந்த படம் புதுசாக இருக்கும். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக காட்சிகளை படமாக்கியிருக்கிறோம். அந்தவகையில் நூறாவது நாள் படம் திரைக்கு வந்தபோது ரசிகர்கள் மத்தியில் எப்படி பரபரப்பு இருந்ததோ, அதேபோன்று இந்த படம் திரைக்கு வரும்போதும் பெரும் பரபரப்பு ஏற்படும்.
மேலும், படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர் ஒரு கட்கூட கொடுக்கவில்லை. ஆனால் ஹீரோ கொலை செய்யும் விதத்தைப் பார்த்துதான் ஏ சான்றிதழ் அளித்து விட்டனர்.
மற்றபடி படத்தில் அதிருப்திதரக்கூடிய காட்சிகள் எதுவும் இல்லை. மேலும் கொடூர கொலைகளைகூட படம் பார்க்கிறவர்கள் அதிர்ச்சியடையாத வகையில்தான் நாசுக்காக படமாக்கியிக்கிறோம் என்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment