பாபிலோனா ஆடிய குத்துப்பாட்டுக்காக ஏ சான்றிதழ் வழங்கிய சென்சார்போர்டு!

No comments
ஏராளமான படங்களில் அயிட்டம் பாடல்களுக்கு ஆடியிருப்பவர் பாபிலோனா. கவர்ச்சி விசயத்தில் எந்தவித ஆட்சேபனையும் இன்றி வாரி வழங்கும் வள்ளலாக திகழ்கிறார். அதனால் பாபிலோனா குத்தாட்டம் ஆடியிருக்கிறார் என்றாலே சென்சார்போர்டு அதிகாரிகள கத்திரியும் கையுமாக அலாட் ஆகி விடுகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் சிறுவாணி என்ற படம் தணிக்கைக்காக சென்றபோது, படத்திற்கு யு சான்றிதழ் கொடுப்பதற்கான அனைத்து தகுதிகளும் இருந்தும், பாபிலோனா விலைமாது வேடத்தில் ஆடிய குத்தாட்டத்தைப்பார்த்தவர்கள், இதற்கெல்லாம் டபுள் ஏ தர வேண்டும் என்றார்களாம். காரணம் கேட்டபோது, சாதாரண குத்தாட்டத்திற்கே இப்போதெல்லாம் ஏ சான்றிதழ் கொடுக்கிறோம். 
ஆனால், இந்த பாடலில் பாபிலோனோ ஆடியிருப்பதைப்பார்த்தால் படு ஆபாசமாக உள்ளது. அதுவும் அவரை குனிந்து நிற்பது போலவும், மல்லாக்க படுப்பது போலவும் நீங்கள் எடுத்திருக்கிற டேக் ஒவ்வொன்றும் விரசமாக உள்ளது என்று சொன்னவர்கள், இந்த பாடலை படத்திலிருந்து தூக்கி விட்டால், படத்திற்கு யு சான்றிதழ் தருகிறோம் என்றார்களாம். 
 ஆனால், படத்தின் தயாரிப்பாளரோ, இந்த பாடல் எனது சொந்த ஊரான கோவையிலுள்ள பல ஊர்களின் பெயர்கள் இடம்பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால், ஏ சர்டிபிகேட் கொடுத்தாலும் சரி, பாட்டை மட்டும் தூக்க மாட்டேன். ஏனென்றால் தியேட்டருக்குள் வரும் இளவட்ட ரசிகர்களுக்காகவே இந்த பாடலை வைத்திருக்கிறோம் என்று மறுத்து விட்டாராம். அதனால், பாபிலோனாவின் பாடலுக்காக சிறுவானிக்கு ஏ சான்றித்ழ் கொடுத்திருக்கிறது சென்சார்போர்டு.

No comments :

Post a Comment