பார்வையற்ற பெண்ணின் கதை சொல்லும் தகவல்!

No comments
பார்வையற்ற காதலர்களை பற்றி குக்கூ படம் தயாராகி வருகிறது. அதேபோல சிறிய பட்ஜெட்டில் பார்வையற்ற ஒரு பெண்ணின் காதலையும், வாழ்க்கையையும் சொல்கிறதாம் தகவல் என்ற படம். முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். மலையாள இயக்குனர் பரதனிடம் உதவியாளராக இருந்த கே.சசீந்திரா இயக்கி உள்ளார். படத்தை பற்றி அவர் கூறியதாவது: டிஜிட்டல் சினிமாக்களுக்கு மத்தியில் கோடாக் பிலிமில் எடுக்கப்பட்டுள்ள படம். தேனி மதுரை பகுதியில் 82 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒரு அக்ரஹாரத்தின் பின்னணியில் அழகான காதல் கதை ஒன்று சொல்லப்படுகிறது.
பார்வையற்ற ஏழை பெண்ணுக்கு வரும் காதல் வழியாக அவளது வலியை சொல்கிறோம். இது தவிர இன்னொரு கதையும் உண்டு. மூன்று நண்பர்கள் பணம் சம்பாதிக்க அலைகிறார்கள். அவர்களுக்கு ஒரு தகவல் வருகிறது. அந்த தகவல் பணம் பற்றியது. அதனால் அவர்கள் பிரிகிறார்கள். அது என்ன தகவல் என்பது படத்தின் இன்னொரு பகுதி. வருகிற 14ந் தேதி படம் ரிலீசாகுது என்கிறார் சசீந்திரா.

No comments :

Post a Comment