மதுமிதா மூன்றாவதாக இயக்கும் 'மூணே மூணு வார்த்தை!!'
வல்லமை தருவாயோ, கொலயா கொலயா முந்திரிக்கா , படங்களை தொடர்ந்து மதுமிதா இயக்கத்தில் மூன்றாவது உருவாகும் படம் மூணே மூணு வார்த்தை . கேபிட்டல் பிலிம் வொர்க்ஸ் சார்பில் எஸ்.பி.பி.சரண் தயாரிக்கும் இப்படம், காதல் கலந்த நகைச்சுவையாக இந்தப்படம் உருவாக இருக்கிறது. ஹீரோவாக அர்ஜூன் சிதம்பரம் நடிக்கிறார். சுட்ட கதை மற்றும் இரண்டாம் உலகம் படங்களில் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வெங்கடேஷ் ஹரி நாதன் மற்றொரு நாயகனாக நடிக்கிறார் .
ஆதிதி செங்கப்பா கதாநாயகி ஆக அறிமுகம் ஆகிறார்.
இந்த புத்துணர்ச்சி ஊட்டும் இந்த இளைய தலைமுறை நடிகர்களுடன் இணைந்து தங்களது அனுபவத்தை ஒருங்கிணைத்து நடிக்கின்றனர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் லக்ஷ்மி . மூன்று தலைமுறையாக நடித்து கொண்டிருக்கும் தேசிய விருது பெற்ற லக்ஷ்மி பல வருடங்களுக்கு பிறகு நடிக்கும் படம் மூணே மூணு வார்த்தை. பிரபல ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத்திடம் உதவியாளராக பணியாற்றிய வெங்கடேஷ் இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகவும், கார்த்திகேய முர்த்தி இசை அமைப்பாளராகவும், மணி கார்த்திக் கலை இயக்குனராகவும், கிரண் கண்டி பட தொகுப்பாளராகவும் இந்த படத்தில் அறிமுகமாகின்றனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment