போலீஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன்!

No comments
தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் அடுத்து டானா என்ற படத்தை இயக்குகிறார். எதிர்நீச்சல் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இப்படத்துக்கு கொலவெறி அனிருத் இசையமைக்கிறார். ஆனால், ப்ரியாஆனந்துக்கு பதிலாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டூயட் பாடுகிறாராம். இப்படத்தில் சிவகார்த்திகேயன்தான் டானாவாம். டானா என்றால் போலீஸ்காரராம். 
வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் போலீஸை இப்படித்தான் அழைத்தார்களாம். அதனால் டானா என்றால் என்ன? என்று புரியாமல் தியேட்டருக்குள் வரும் ரசிகர்களுக்கு புரியும் வகையில் ஒரு ப்ளாஸ்பேக்கும் வைத்திருக்கிறாராம் இயக்குனர் துரை. செந்தில்குமார். இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், மான்கராத்தே போன்ற படங்களுக்கு தனது பெஸ்ட் இசையை கொடுத்த அனிருத், இந்த படத்திலும் பட்டையக்கிளப்பப்போகிறாராம்.
 விரைவில் படப்பிடிப்பு தொடங்கியிருப்பதால் அனிருத்தும் இசைப்பணிகளை அதிரடியாக துவங்கி விட்டாராம். மான்கராத்தேயில் ஒரு பாடலில் சிவகார்த்திகேயனுடன் குத்தாட்டம் போட்டிருக்கும் அனிருத், டானாவிலும் குத்தாட்டம் போட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

No comments :

Post a Comment