சிம்புவின் அதிரடி அணுகுமுறை

No comments
நடிகர் சிம்பு, ரஜினியின் தீவிர ரசிகர். அதனால் தான், சின்ன வயதிலேயே, தன் பெயருக்கு முன்னால், 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார். பின், ஒரு கட்டத்தில், அஜீத் பக்கம் திரும்பி விட்டார். ரஜினி படங்கள் போன்று, அஜீத் படங்களையும் பார்க்கத் துவங்கினார். அதற்காக, ரஜினி ரசிகர் என்கிற வட்டத்திலிருந்து இன்னும் வெளியேறவில்லையாம் சிம்பு. இப்போதும், அதே பழைய ஆர்வத்துடன் தான், ரஜினி படங்களை ரசித்து வருகிறாராம். 
அதை மெய்ப்பிக்கும் வகையில் தான், தற்போது நடித்து வரும், 'வாலு' படத்தில் ரஜினியைப் போலவே, சில காட்சிகளில் நடித்துள்ளாராம் சிம்பு. இந்த படத்தின் கதை, பாடல்கள், சண்டை என, அனைத்துமே, ரஜினி படங்களை போன்றே படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த படம் வெளியானால், ரஜினி படங்களுக்கு கிடைப்பது போன்ற வரவேற்பு கிடைக்கும் என, நினைக்கிறாராம், சிம்பு.

No comments :

Post a Comment