'பாட்டு பாட தயார்; ஆனால் நடிக்க மாட்டேன்'

No comments
தேவர் மகன்' படத்தில், இளையராஜாவின் இசையில், 'போற்றிப் பாடடி பெண்ணே' என்ற பாடலை, குழந்தை குரலில் பாடி, தன் இசைப்பயணத்தை துவங்கினார், ஸ்ருதி ஹாசன். அதைத் தொடர்ந்து, ஒரு சில படங்களில் பாடினார். பின், நடிப்பில் பிசியாகி விட்டார். பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் பிசியாகவுள்ள அவர், தமிழ் பட இயக்குனர்கள் கதை கூறச் சென்றால்,'நோ சான்ஸ்' என, கை விரித்து விடுகிறார். அதே நேரத்தில், தமிழ் படங்களில் பாட்டு பாட வேண்டுமானால், உடனடியாக பிளைட் பிடித்து, சென்னை வந்திறங்கி விடுகிறார். 
சமீபத்தில்,'என்னமோ ஏதோ' என்ற படத்திலும், மான்கராத்தே' படத்திலும், பாடல்களை பாடியுள்ளார். ஸ்ருதியின் இந்த விசித்திரமான அணுகுமுறை புரியாமல், கோலிவுட் இயக்குனர்கள் மண்டை காய்ந்து போயிருக்கின்றனர்.

No comments :

Post a Comment