ரஜினிக்காக மட்டுமே கோச்சடையான் படத்தில் நடித்தேன்…: தீபிகா படுகோனே

No comments
சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்தால் கவுரவம் என்பதாலேயே எனது கதாபாத்திரத்தைக் கூட விசாரிக்காமல் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார் ஹிந்தி நடிகை தீபிகா படுகொனே. ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் ஷாரூக்கான் ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமானார் நடிகை தீபிகா படுகோனே. முதல் படமே அவருக்கு முன்னணி நடிகை அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. 
தற்போது அதிக வருமானம் வாங்கும் வெற்றிப்பட நாயகிகளில் ஒருவராக திரை உலகில் பிரகாசிக்கிறார் தீபிகா. இந்நிலையில், கோச்சடையான் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார் தீபிகா. அப்பட அனுபவம் குறித்து ச்செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது :

No comments :

Post a Comment