ஸ்பைடர்மேன்-2 படத்திற்கு டப்பிங் பேசவுள்ள தமிழ் நடிகர்

No comments
சுப்பு பஞ்சு சமீபகாலங்களில் தமிழ்த் திரைப்படத் துறையில் பிரபலமாக அறியப்பட்டுள்ள துணை நடிகர் ஆவார்.'பாஸ் என்ற பாஸ்கரன்', 'மங்காத்தா', 'சென்னையில் ஒரு நாள்' மற்றும் சமீபத்தில் வெளியான 'நிமிர்ந்து நில்' போன்ற திரைப்படங்களில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' படத்திலும், விக்ரம் நடித்த 'கந்தசாமி' படத்திலும் டப்பிங் செய்துள்ளார். தற்போது கிடைத்துள்ள திரைத்துறைத் தகவல்களின்படி தமிழில் வெளிவரவுள்ள 'ஸ்பைடர்மேன்-2' ஆங்கிலப் படத்தில் உள்ள ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கான தமிழ் டப்பிங்கில் இவர் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

No comments :

Post a Comment