லட்சுமிமேனனுடன் விஷால் நெருக்கம்? படவிழாவில் பரபரப்பு பேச்சு

No comments
‘பாண்டிய நாடு’ படத்தில் விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்தனர். தற்போது ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திலும் இணைந்து நடிக்கிறார்கள். இதனால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. நான் சிகப்பு மனிதன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தபோது அதில் பங்கேற்று பேசிய விஷாலின் நண்பரும் நடிகருமான விஷ்ணு, ‘‘இருவருக்கும் தொடர்பு இருப்பதாக மறைமுகமாக குறிப்பிட்டார். அவர் பேசும்போது லட்சுமிமேனனை என் கண்ணில் காட்டாமல் விஷால் மறைத்து வைத்துள்ளார். அவர்களுக்குள் இருப்பது என்ன? என்று குறிப்பிட்டார். இதை கேட்டு கூட்டத்தினர் சிரித்தனர். டைரக்டர் பாலா பேசும்போது, இந்த படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது எனக்கு ஒரு விஷயம் புரிகிறது. 
அதாவது எப்போதும் தூக்கத்தில் தூங்கி வழியும் என் கதையை கிண்டல் செய்துதான் விஷாலும், டைரக்டர் திருவும் நான் சிகப்பு மனிதன் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார்கள். என் அடுத்த படத்தில் விஷாலுக்கு கச்சேரி வைத்துள்ளேன் என்று மிரட்டும் தொணியோடு தமாஷாக பேசினார். டைரக்டர்கள் பார்த்திபன், சுசீந்திரன், சமுத்திரக்கனி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், அருண்விஜய் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 விஷாலே இப்படத்தை தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

No comments :

Post a Comment