ஏப்ரல் 5ம் தேதி மதுரையில் இளையராஜா பேன்ஸ் கிளப் துவக்கம்
இசைஞானி இளையராஜாவிற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள், நலம் விரும்பிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் அமைப்புதான் ‘இளையராஜா பேன்ஸ் கிளப்’.
இசைஞானியின் ரசிகர்கள் அவரது இசையால் ஈர்க்கப்பட்டு தங்களுக்கென சில கொள்கைப் பிடிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை நல்வழிப்படுத்திய இசைஞானி அவர்களின் ரசிகர்கள் சமூக விழிப்புணர்வு மற்றும் சமூக நற்பணிகள், சமூக முன்னேற்றத்திற்கென ஆக்கப் பூர்வமான செய்வதென முடிவெடுத்து அதனை இந்த இளையராஜா பேன்ஸ் கிளப் மூலம் செயலாக்க உள்ளனர்.
இளையராஜாவின் அங்கீகாரத்துடன் அவரது மகன் கார்த்திக்ராஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி, டைரக்டர் ரத்னகுமார் ஆகியோரை மேனேஜிங் டிரஸ்டிகளாக கொண்டு அரசாங்க அங்கீகாரத்துடன் துவங்கப்படும் ஒரு அமைப்பு இது. இந்த அமைப்பு மட்டுமே அதிகாரப்பூர்வமாக செயல்படும் உரிமை கொண்டது.
சாதி, மதம், இனம், அரசியல் போன்ற விஷயங்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பு இது.
இதில் ஒருகோடி பேருக்கு மேல் உறுப்பினராக சேர உள்ளனர். இதற்கான அறிவிப்பை ஏப்ரல் 5ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் அறிவிக்க உள்ளனர். கார்த்திக்ராஜா தலைமையில் “ராஜாவின் சங்கீதா திருநாள்” நிகழ்ச்சி நடைபெறும் ஏப்ரல் 5ம் தேதி அன்று “இசைஞானி” என்ற வார இதழும் துவங்கப்பட உள்ளது.
திரைப்படத்துறையில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகளும் இதில் இணைய உள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment