உத்தமவில்லனோடு மீண்டும் பூஜா குமார், ஆண்ட்ரியா

No comments
உலகநாயகன் கமலஹாசன் நடிக்க இருக்கும் உத்தம வில்லன் திரைப்படம் பெங்களூரில் மார்ச் 3ம் திகதி துவங்க உள்ளது. திருப்பதி பிரதர்ஸ் என். லிங்குசாமி தயாரிப்பில் இப்படத்தை இயக்கவுள்ளார் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த். மூன்று நடிகைகள் கமலுடன் இப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இதில் முதன்முதலாக காஜல் அகர்வால், த்ரிஷா மற்றும் தமன்னாவிடம் பேசியுள்ளார்கள். காஜல் அண்மையில் அளித்த பேட்டியில் தனக்கு இன்னும் இப்படத்தில் தேதி அறிவிக்கப்படவில்லை என கூறிப்பிட்டிருந்தார். 
 தற்போது விஸ்வரூபம் 1 மற்றும் 2 வில் நடித்த பூஜாகுமார், ஆண்ட்ரியா கமலுக்கு ஜோடியாக நடிக்கபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பூ மற்றும் மரியான் திரைப்படத்தில் நடித்த பார்வதி மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

No comments :

Post a Comment