இயக்குநரையும், இசையமைப்பாளரையும் இணைத்து வைத்த அஜீத்!
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், அஜீத் நடிக்கும் புதிய படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்ற செய்தி திரையுலகில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வருடங்களாக கௌதம் வாசுதேவ் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் இருவருக்கும் இடையில் சுமுகமான உறவு இல்லாததே காரணம்.
மின்னலே படத்தில் ஹாரிஸ் ஜெயராஜை அறிமுகப்படுத்தியதே கௌதம் வாசுதேவ் மேனன்தான். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இருவரும் பல படங்களில் இணைந்தனர். வெற்றிக்கூட்டணியாக பவனி வந்தநிலையில், வாரணம் ஆயிரம் படத்தின்போது இருவருக்கும் முட்டிக் கொண்டது.
அதன் பிறகு ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா என்று இசையமைப்பாளர்களை மாற்றிய கௌதம் வாசுதேவ் மேனன், தற்போது அஜித்தை வைத்து இயக்கும் படத்துக்காக மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜை தேடி வந்திருக்கிறார்.
பிரிந்தவர்கள் எப்படி சேர்ந்தனர்? படத்தின் நாயகனான அஜித்குமார்தான் இருவரையும் இணைத்து வைத்தாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment