சைவம் மூலம் நல்ல இயக்குநர் என பெயர் எடுக்க ஆசைப்படும் விஜய்!

No comments
கிரீடம், மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா படங்களின் இயக்குநர் விஜய், அடுத்து தான் சொந்தமாக தயாரித்து, இயக்கி, நடித்து வரும் படம் சைவம். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. தெய்வத்திருமகள் சாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பற்றி இயக்குநர் விஜய் கூறும்போது, சைவம் எனது சொந்தக்கதை. இந்தப்படத்தில் பெரிய நடிகர்கள் யாரும் கிடையாது. பேபி சாராவும், நாசர் மட்டும் தான் முக்கிய ரோல் வகிக்கின்றனர். இப்படத்தில் நாசர் மகன் பாஷா அறிமுகமாகிறார். இவர்களுடன் இப்படத்தில் ஒரு சேவலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ் சமூகம் மறந்த விளையாட்டுகளுக்கான பாண்டி ஆட்டம், பல்லாங்குழி போன்ற பல விஷயங்களையும், கிராமத்து வாய்க்கால், வரப்பு, கண்மாய் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் இப்படத்தில் பதிவு செய்துள்ளேன். 
சின்ன வயதில் நான் பார்த்து பார்த்து ரசித்து எங்க ஊரான காரைக்குடியை மனதில் வைத்து இப்படத்தை இயக்கி வருகிறேன். இதுநாள் வரை நான் இயக்கிய படங்களான கிரீடம், மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா போன்றவற்றில் அப்படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள் தான் பேசப்பட்டனர். ஆனால் சைவம் படம் மூலம் ஒரு நல்ல இயக்குநர் என்ற பெயரை எடுக்க ஆசைப்படுகிறேன். 
தற்போது படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. என் படங்களில் ஏற்கனவே பணியாற்றிய ஜீ.வி.பிரகாஷ்குமார், நா.முத்துக்குமார், நீரவ்ஷா போன்றவர்கள் இப்படத்திலும் தொடர்கிறார்கள். மே 1ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.

No comments :

Post a Comment