விஜய்க்காக மெகா ஹிட் டியூன் தேடும் கொலவெறி அனிருத்!
தனுஷ், சிவகார்த்திகேயனின் பேவரிட் மியூசிக் டைரக்டரான அனிருத். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். சினிமாவுக்குள் வந்து இரண்டு வருடங்களே ஆன நிலையில், விஜய் படத்திற்கு இசையமைக்கும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கும் அனிருத், இந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, சில சிறிய பட்ஜெட் படங்களில் கூட கமிட்டாகி பின்னர் வெளியேறினார்.
மேலும், மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும்போதே, விஜய் படத்துக்கான டியூன்களை ரெடி பண்ணத் தொடங்கி விட்டார்.
அப்படி தொடங்கியவர் இப்போது அப்படத்துக்கு தேவையான சில டியூன்களை ஓ.கே செய்து விட்டவர், விஜய் பாடும் டியூனை மட்டும் இன்னும் ஓ.கே பண்ணவில்லை.
ஏற்கனவே விஜய் பாட வேண்டிய டியூனை ரெடி பண்ணினபோதும், அதில் அனிருத்துக்கு போதுமான திருப்தி வரவில்லையாம்.
அதிலும், சமீபத்தில் துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள், ஜில்லாவில் கண்டாங்கி கண்டாங்கி என விஜய் பாடிய இரண்டு பாடல்களுமே ஹிட் என்பதால். அந்த இரண்டு பாடல்களையும் மிஞ்சும் வகையில் தனது இசையில் உருவாகும் பாடல் மெகா ஹிட்டாக வேண்டும் என்று நினைக்கிறாராம்.
அதனால், அந்த ஒரு டியூனுக்காக நூற்றுக்கணக்கான டியூன்களை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறாராம் அனிருத்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment