சிவகார்த்திகேயனை அப்செட்டாக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குநர் பொன்ராம்!

No comments
தற்போது மான் கராத்தே படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்து லிங்குசாமி தயாரிப்பில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குநர் பொன்ராம் இயக்கும் படத்தில்தான் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். சிவகார்த்திகேயன் கொடுத்த கால்ஷீட் தேதிகள் நெருங்கிவிட்டநிலையிலும், திட்டமிட்டபடி பொன்ராம் இன்னும் கதையை ரெடி பண்ணவில்லையாம். அதனால் சிவகார்த்திகேயன் அப்ஸெட்டாகிவிட, முதலில் பாடல் காட்சிகளை எடுத்துவிட்டு, பிறகு டாக்கிபோர்ஷனை எடுக்கலாம் என்று பொன்ராம் யோசனை சொன்னாராம். அதை நிராகரித்துவிட்டாராம் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றியடைந்ததால் நம் காம்பினேஷனில் வரும் அடுத்தப்படத்துக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
 அதை கெடுத்துக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. எனவே இன்னும் காலஅவகாசம் எடுத்துக்கொண்டு கதையை ரெடி பண்ணுங்கள் என்று சொன்னதோடு, தனுஷின் டானா படத்துக்கு கால்ஷீட்டைக் கொடுத்துவிட்டார். எந்த விளம்பரமும் இல்லாமல் டானா படத்துக்கு பூஜை போடப்பட்டு தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

No comments :

Post a Comment