மூன்று காலகட்டங்களில் பயணிக்கும் நெடுஞ்சாலை

No comments
சூர்யா, ஜோதிகா நடித்த ஜில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் நெடுஞ்சாலை. ஆரியுடன் புதுமுகம் ஷிவதா நடித்துள்ளார். படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது. வருகிற 28ந் தேதி ரிலீசாகிறது. படம் பற்றி கிருஷ்ணா தரும் தகவல்கள்: இரண்டு வருட கடுமையான உழைப்பில் உருவாகி இருக்கிறது நெடுஞ்சாலை. படத்தின் லொக்கேஷன் பார்க்கவே ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்திருக்கிறேன். ஒரு வீட்டின் வசதியை அந்த வீட்டின் வரவேற்பரை சொல்லும், ஒரு நாட்டின் வசதியை அந்த நாட்டின் தேசிய நெடுஞ்சாலை சொல்லும். 
அந்த அளவுக்கு ஒரு தேசத்தின் நரம்பாக நெடுஞ்சாலைகள் இருக்கிறது. பல்வேறு தரப்பட்ட மக்கள், கலாச்சாரம் இருக்கும் இடம் தேசிய நெடுஞ்சாலை. அந்த அடிப்படையில் இதன் கதையை எழுதினேன். 1960, 1980, 2013 ஆகிய மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை. 
60களில் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக இருந்தது. 80களில் கொஞ்சம் அகன்று நடுவில் வெள்ளை கோடு போட்டு இருவழியாக பிரிக்கப்பட்டது. இப்போது நான்கு வழி சாலைகளாகவும், 6 வழி சாலைகளாகவும் மாறிவிட்டது. ஓட்டல்கள், மோட்டல்கள், விடுதிகள் என்ற நெடுஞ்சாலை கலாச்சாரமே மாறிவிட்டது. அதை அப்படியே பதிவு செய்கிறோம். என்கிறார் கிருஷ்ணா.

No comments :

Post a Comment