பழனி கோவிலில் தங்கரதம் இழுத்து நடிகை லட்சுமிமேனன் வழிபாடு

No comments
நடிகை லட்சுமிமேனன் குடும்பத்தினருடன் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்த பின்னர் தங்கரதம் இழுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த வருடம் நான் பழனிக்கு வந்தபோது கும்கி படத்தில் நடித்து கொண்டு இருந்தேன். முருகனை தரிசித்த போது 'நான் நடிக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும். தமிழ், மலையாள பட உலகில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன். மேலும் அடுத்த முறை வரும்போது தங்கரதம் இழுப்பதாகவும் வேண்டிக்கொண்டேன். 
 பழனி முருகன் அருளால் நான் வளர்ந்து வருகிறேன். என்னுடைய படங்களும் வெற்றி பெற்று உள்ளது. எனவே எனது வேண்டுதலை நிறைவேற்ற இப்போது பழனி முருகன் கோவிலுக்கு வந்து தங்கரதம் இழுத்து வழிபாடு செய்தேன்' என்றார். நடிகை லட்சுமிமேனன் வருகையை அறிந்த ரசிகர்கள் அங்கு திரண்டனர். 
 அவர்கள் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினர். பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று நடக்கும் இன்னிசை விழாவில் லட்சுமிமேனன் கலந்து கொள்கிறார்.

No comments :

Post a Comment