உதயநிதி ஸ்டாலினுக்கு கால்ஷீட் இல்லை என்று கைவிரித்த சிவகார்த்திகேயன்!
கடந்த தி.மு.க.ஆட்சியில் பரபரப்பாக இயங்கி வந்த உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் படநிறுவனம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அடக்கியே வாசிக்கிறது.
அவ்வளவாக படங்களைத் தயாரிப்பதில்லை.
அதே சமயம், அவ்வப்போது ஒரு படத்தைத் தயாரிப்பதன் மூலம் தானும் சீனில் இருப்பதாக காட்டிக் கொண்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். கடைசியாக இவர் தயாரித்து நடித்த இது கதிர்வேலனின் காதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே அடுத்து உடனடியாய் ஆரம்பிக்க இருந்த நண்பேன்டா படத்தையும் சில மாதங்களுக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.
இதற்கிடையில், நான்கைந்து படங்களில் நடித்தநிலையிலேயே அசுர வளர்ச்சியடைந்து விஜய், அஜித், சூர்யா ரேன்ஜுக்கு பிசினஸ் வேல்யூ உள்ள ஹீரோவாகிவிட்டார் சிவகார்த்திகேயன்.
அவரை வைத்து இப்போது படம் எடுத்தால், இது கதிர்வேலனின் காதல் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்டிவிடலாம் என்று கணக்குப் போட்ட உதயநிதி ஸ்டாலின், இப்படியொரு திட்டத்துடன் சிவகார்த்திகேயனை சமீபத்தில் சந்தித்திருக்கிறார்.
உதயநிதி உடன் பணிவாகப்பேசிய சிவகார்த்திகேயன், தயவு செய்து கால்ஷீட் மட்டும் கேட்காதீர்கள். உங்களுக்கு டேட் கொடுத்தால் அரசியல் மட்டத்தில் எனக்கு நிறைய பிரச்னைகள் வரும்.
அதை சமாளிக்கும் அளவுக்கு எனக்கு வயதும் இல்லை, அனுபவமும் இல்லை என்று மனம்விட்டுப் பேசி சமாளித்து அனுப்பிவிட்டாராம். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும், நேத்து வந்த ஹீரோ நமக்கு கால்ஷீட் இல்லை என்று சொல்லிவிட்டாரே என்று உதயநிதியை ஒரு கும்பல் உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறதாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment