ஆன்மீகத்தில் நயன்தாரா: ருத்ராட்ச மாலை அணிந்து கோவில்களில் வழிபாடு

No comments
நயன்தாரா இமயமலைக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள கோவில்களில் வழிபாடு நடத்தினார். உதயநிதி ஜோடியாக நண்பேன்டா படத்திலும் ஜெயம்ரவி ஜோடியாக பெயரிடப்படாத படமொன்றிலும் நயன்தாரா நடித்து வருகிறார். நண்பேன்டா படப்பிடிப்பு கும்பகோணத்தில் முடிவடைந்தது. ஜெயம் ரவியுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு டெராடூனில் துவங்கியுள்ளது. அங்கு தான் நடிக்க வேண்டிய காட்சிகளை முடித்து கொடுத்து விட்டு நேராக இமயமலை சென்றார். அங்கு கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தார். உடம்பில் காவி துண்டை போர்த்திக் கொண்டார். நெற்றியில் சந்தனத்தால் சூலாயுதம் வரைந்தார். 
பிறகு ஹரித்வார், ரிஷிகேஷ் பகுதிகளுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார். சப்தரிஷி ஆசிரமத்துக்கு சென்று தியானம் செய்தார். நீலகண்ட மகாதேவர், சப்தசரோவர், லட்சுமணன் சூலம், ரெமிமேபர், கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டார். கார் செல்ல முடியாத இடங்களில் நடந்தே சென்று வழிபட்டார். நயன்தாரா இந்து மதத்தில் தீவிர நம்பிக்கையுள்ளவராக மாறியுள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஆர்ய சமாஜத்துக்கு சென்று இந்து மதத்துக்கு மாறினார். அதன் பிறகு இந்து கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
 எந்த ஊருக்கு படப்பிடிப்புக்கு போனாலும் அங்குள்ள கோவில்கள் பற்றி தெரிந்து கொண்டு நேரில் போய் சாமி கும்பிட்டு வருகிறார். நயன்தாரா சமீபத்தில் நடித்த ராஜா ராணி, ஆரம்பம், இது கதிர்வேல் காதல் படங்கள் வெற்றிகரமாக ஓடின. அடுத்து தமிழ், தெலுங்கில் தயாரான அனாமிகா படம் வருகிறது. இது இந்தியில் பரபரப்பாக ஓடிய கஹானி படத்தின் ரீமேக் ஆகும்.

No comments :

Post a Comment