பர்மா படத்திற்காக ரூ.1.5 கோடி மதிப்புள்ள காரை வழங்கிய பிம்டபிள்யூ நிறுவனம்

No comments
ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்ஷன் வெம்புட்டி தயாரிக்கும் புதியபடம் ‘பர்மா’. இதில் நாயகனாக மைக்கேல், நாயகியாக ரேஷ்மி மேனன் நடிக்கிறார்கள். மேலும் 'சரோஜா' சம்பத் மற்றும் அதுல் குல்கர்னி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை தரணிதரன் எழுதி இயக்கியுள்ளார். யுவா ஒளிப்பதிவை கவனிக்கிறார். சுதர்சன் எம் குமார் இசையமைக்கிறார். பர்மா திரைப்படம் கிரைம் மற்றும் திரில்லர் வகையில் டெக்னிக்கல்லாக மிரட்டும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பிட்சா, சூது கவ்வும், வருதபடாத வாலிபர் சங்கம் போன்ற வெற்றி படங்களில் பணிபுரிந்த தொழில் நுட்ப கலைஞர்கள் இறுதிகட்ட வேலையில் மும்முரமாக ஈடுபட்டுவுள்ளனர்.
 பர்மா படத்தின் கதையை கேட்ட பிம்டபிள்யூ நிறுவனம், 1.5 கோடி மதிப்புள்ள காரை முழு படத்திற்கும் பயன்படுத்த வழங்கியுள்ளது.

No comments :

Post a Comment