மணிரத்னம் படத்தில் ஐஸ்க்கு பதிலாக அசினா?

No comments
கடல் படம் படு தோல்வி அடைந்ததால் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மணிரத்னம். இதனால் கடும் உழைப்பை போட்டு மணிரத்னம் தனது அடுத்தபடத்தின் திரைக்கதை முழுவதையும் தயார்செய்து விட்டு படம் எடுக்க உள்ளார். தமிழ், தெலுங்கில் எடுக்க உள்ள இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாகவும், ஐஸ்வர்யாராய் நாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் ஐஸ்வர்யா நடிப்பதற்கு மாமியார் ஜெயாபச்சன் எதிர்ப்பு தெரிவித்திருந்தாராம். ஐஸ்வர்யாராய் நடிக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்திலேய இதுவரை கால்ஷீட் கொடுக்கவில்லையாம். படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ஐஸ்வர்யாவுக்கு பதிலாக யாரை நடிக்க வைப்பது என்று ஆலோசனை செய்தார் மணிரத்னம்.
 ஐஸ்வர்யாவுக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் அசினை நடிக்கவைக்க முடிவு செய்திருக்கிறாராம். இதுபற்றி அதிகாரப்பூர்வமாக மணிரத்னம் இன்னும் அறிவிக்கவில்லை.

No comments :

Post a Comment