மான் கராத்தே பாடல் காட்சி மீண்டும் படமாக்க ஏ.ஆர்.முருகதாஸ் உத்தரவு

No comments
சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிக்கும் படம் மான் கராத்தே. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதி தயாரிக்கிறார். அவரது உதவியாளர் திருக்குமரன் இயக்குகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். படம் முழுவதும் எடுக்கப்பட்டு ஏ.ஆர்.முருகதாசிடம் காட்டப்பட்டது. அதைப் பார்த்த முருகதாஸ் சில காட்சிகளை நீக்கச் சொன்னதோடு சிவகார்த்திகேயன், ஹன்சிகா ஆடிப் பாடிய ஒரு பாடல் காட்சி முழுவதையும் நீக்கிவிட்டு மீண்டும் எடுக்கச் சொல்லியிருக்கிறார். ஐதராபாத்தில எடுக்கப்பட்ட அந்தப் பாடல் காட்சியை மீண்டும் சென்னை துறைமுகத்தில் படமாக்கி வருகிறார்கள். இதற்காக ஹன்சிகா மேலும் 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார். இந்த பாடல் காட்சி ரீ ஷூட் செய்த வகையில் 50 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாம்.

No comments :

Post a Comment