ஒக்கேனக்கல்: சினிமாவானது உண்மை கதை

No comments
புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ஒக்கேனக்கல். பாபு பிருத்வி, ஜோதி தத்தா, ஸ்ராவியா என்ற புதுமுகங்கள் நடிக்க புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மூர்த்தி இயக்கி உள்ளார். படத்தை பற்றி அவர் அளிக்கும் விளக்கம். ஒக்கேனக்கல் என்ற படத்திற்கு டைட்டில் வைத்திருப்பதால் இது தண்ணீர் பிரச்னை படம், மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்னை பற்றிய படம் என்று சிலர் நினைக்கிறார்கள். இது அப்படிப்பட்ட படம் அல்ல. சில வருடங்களுக்கு முன்பு ஒக்கேனக்கல் பகுதி மக்கள் ஒரு சீட்டு கம்பெனியில் பணம் போட்டு ஏமாந்தார்கள். இதனால் பலர் ஒக்கேனக்கல் அருவில் குதித்து தற்கொலை செய்தார்கள். 
இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கிறேன். ஒக்கேனக்கலின் அந்த கரை கர்நாடம் இந்த கரை தமிழ்நாடு இதன் வழியாக ஒரு எல்லை கடந்த காதலைச் சொல்கிறேன் என்கிறார்.

No comments :

Post a Comment