போதையில் மிதக்கும் மலையாள சினிமா: போலீஸ் அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு
கொச்சியில் நடந்த விழா ஒன்றில் கொச்சி மரடு பகுதி போலீஸ் அதிகாரி ஏ.பி.விபின் பேசும்போது மலையாள சினிமா போதையில் மிதப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது: சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் படைப்பாளிகள் போதையில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக இது அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இளம் தலைமுறை சினிமா கலைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். போதை ஏற்றிக் கொண்டால்தான் கற்பனை வளமும், புதிய சிந்தனைகளும் வருவதாக அவர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் இரண்டு சினிமா கதாசிரியர்கள் பக்கத்து வீட்டு பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சினிமா வெளியில் உள்ளவர்களை மட்டுமல்லாது சினிமாவுக்கு உள்ளே இருப்பவர்களையும் போதைக்கு அடிமையாக்கி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment