பஹத்பாசிலுடன் நிச்சயதார்த்தம்: நஸ்ரியா நடிக்க தடை

No comments
நஸ்ரியா சினிமாவில் நடிக்க காதலன் குடும்பத்தினர் தடை விதித்துள்ளனர். இதனால் புது படத்தில் இருந்து விலகினார். தமிழில் ‘நேரம்’, ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’ படங்களில் நடித்தவர் நஸ்ரியா. மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். நஸ்ரியாவுக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து நஸ்ரியா – பஹத் பாசில் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் திருவனந்தபுரத்தில் நடந்தது. நஸ்ரியா சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்று பஹத் பாசில் அறிவித்தார்.
 ஆகஸ்டு 24–ந்தேதி இவர்கள் திருமணம் நடக்க உள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் ‘ஹை ஐ ஆம் டோனி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். மலையாள நடிகர் லால் தயாரிக்கும் இந்த படத்தில் அவரது மகன் ஜூனியர் லால் நாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பை துவங்க ஏற்பாடுகள் நடந்தது. இந்த நிலையில் திடீரென்று அந்த படத்தில் இருந்து நஸ்ரியா விலகி விட்டார். 
அவருக்கு பதில் மியா என்ற நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர். பஹத் பாசிலும் அவரது குடும்பத்தினரும் சினிமாவில் நடிக்க கூடாது என தடை போட்டதாகவும், எனவேதான் படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

No comments :

Post a Comment