சசிகுமாரை வைத்து 100 படம் எடுப்பேன்: டைரக்டர் சமுத்திரக்கனி
ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த “நிமிர்ந்து நில்” படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் சமுத்திரகனி ஈரோடு வந்தார். பின்னர் நிமிர்ந்து நில் படம் ஓடும் ராயல் தியேட்டர், அன்னபூர்ணா தியேட்டர்களில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். ராயல்தியேட்டரில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு சமுத்திரகனி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
“நாடோடிகள்” படம் வெளியானால் காங்கேயம் சிவன்மலை கோவிக்கு வந்து தரிசனம் செய்வதாக வேண்டிக்கொண்டேன். அந்த வேண்டுதலை நிறைவேற்ற சிவன்மலைக்கு மகன் ஹரிவிக்னேஷ்வருடன் சென்று சாமி தாசனம் செய்தேன்.
“நிமிர்ந்து நில்” படம் லஞ்சத்தை மையமாக வைத்து இயக்குனர் சங்கர் இயக்கிய படம்போல இருப்பதாக சொல்கிறார்கள். சங்கரை எனக்கு பிடிக்கும். அதனால் சங்கர் படம்போல இருப்பதாக சொல்வதை பெருமையாக நினைக்கிறேன்.
தேவை பட்டால் என் படத்தில் வன்முறை காட்சிகள் இருக்கும். வன்முறை காட்சி வைக்காமல் வன்முறையின் விளைவுகளை எப்படி சொல்ல முடியும்? “நிமிர்ந்து நில்”
படம் தெலுங்கில் வருகிற ஏப்ரல் 14–ந் தேதி வெளியிடப்படுகிறது. இந்தியிலும் ரீமேக் செய்ய முயற்சி செய்கிறேன். எனக்கு பிடித்த இயக்குனர் கே.பாலசந்தர். நடிகர்களை பொறுத்தவரையில் எல்லோரையும் எனக்கு பிடிக்கும். இவரை வைத்து படம் எடுக்க வேண்டும். அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று லட்சியம் எதுவும் கிடையாது.
யாருடைய கால்சீட்டுக்காகவும் வாய்ப்பு தேடி செல்ல மாட்டேன். புதுசா வர்றவங்களை வைத்து படம் இயக்குவேன். சசிகுமாரை வைத்து 100 படம் எடுப்பேன். என்னை பொறுத்த அளவில் ரசிகர்கள் தான் கடவுள்கள். யாருக்கு ஓட்டப்போட போகிறீர்கள் என்று கேட்கிறீர்கள். எனக்கு அரசியல் தெரியாது.
இவ்வாறு சமுத்திரகனி கூறினார்.
பேட்டியின் போது நடிகர் கே.கே.பி. கோபாலகிருஷ்ணன் உடனிருந்தார்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment