2–வது வாரம் ஓடுகிறது: ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு குவிந்த ரசிகர்கள்

No comments
எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டு உள்ளது. சென்னையில் சத்யம், எஸ்கேப், பி.வி.ஆர்., தேவி பாரடைஸ், அபிராமி தியேட்டர்களில் திரையிடப்பட்டு 2–வது வாரம் ஓடுகிறது. நேற்று தேவி பாரடைஸ் தியேட்டரில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். எம்.ஜி.ஆர். கட்– அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து படம் பார்த்தனர். டைரக்டர் அமீர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் படம் பார்த்தனர். நேற்று ஒரேநாளில் பகல் காட்சியில் மட்டும் இந்த தியேட்டரில் ரூ.60 ஆயிரத்து 379 வசூலானது.
 ஒருவாரத்துக்கு முன்பு இதே தியேட்டரில் காலை, பகல் காட்சி இரண்டிலும் ரூ.47 ஆயிரத்து 494 மட்டுமே வசூலானது. இரண்டாவது வாரத்தில் வசூல் கூடி இருப்பதாக தியேட்டர் மானேஜர் தெரிவித்தார். படம் பார்த்த ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கப்பலில் பயணம் செய்து வந்த அனுபவத்தை பெற்றோம் என்றனர். 
ரசிகர்கள் ஆரவாரமாக படம் பார்த்தனர் என்றும் ஒரு வருடம் இரவு பகல் பணிபுரிந்து கஷ்டப்பட்டு இப்படத்தை டிஜிட்டலில் புதுப்பித்ததற்கான பலனை பெற்று விட்டேன் என்றும், இந்த படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் தெரிவித்தார். தேர்தல் முடிந்த பிறகும்., இந்த படம் தமிழகம் முழுவதும் திரையிடப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments :

Post a Comment