ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்த ஹன்சிகா
ஜெயம் ரவியும் ஹன்சிகாவும் ஏற்கனவே ‘‘எங்கேயும் காதல்’’ படத்தில் ஜோடியாக நடித்தனர். பிரபுதேவா இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ரோமியோ ஜுலியட் என்ற பெயரில் தயாராகும் படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்.
இந்த படத்தை லட்சுமண் இயக்குகிறார். இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, ‘‘ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜுலியட்’ படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமாகி இருப்பது உண்மைதான். பிரமாதமான கதை. நல்ல கேரக்டர். எனக்கு மிகவும் பிடித்தது.
படத்தை பற்றி வேறு விஷயம் எதுவும் இப்போது சொல்ல முடியாது’’ என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment