பணத்துக்காக நடிக்க வரவில்லை: ரித்திகா ஸ்ரீனிவாஸ்
வழக்கு எண் 18/9, படத்தில் பெண் தொழில் அதிபராக நடித்து புகழ்பெற்றவர் ரித்திகா ஸ்ரீனிவாஸ். தற்போது வெளியாகி உள்ள நிமிர்ந்து நில் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். "பணத்துக்காக நான் நடிக்க வரவில்லை. மேலும் அவர் கூறியதாவது:
சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் ஆச்சாரமான எங்கள் குடும்பம் என்னை சினிமால நடிக்கிறதுக்கு அனுமதிக்கல. அன்னிக்கு அனுமதிச்சிருந்தாங்கன்னா இன்னிக்கு ஹீரோயினா இருந்திருப்பேன். இப்போ கல்யாணமாகி துபாயில செட்டிலாகிட்டேன்.
என்னோட கணவர் துபாய், லண்டன் அமெரிக்காவில் பிசினஸ் செய்கிறார். நான் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்துறேன். தீடீர்னு ஒரு நான் சினிமால நடிக்கட்டுமான்ன ஹஸ்பண்ட்கிட்ட பர்மிஷன் கேட்டேன். உனக்கு விருப்பமுன்னா நடி என்றார். நடிக்க வந்து விட்டேன்.
நான் பணத்துக்காக நடிக்க வரவில்லை. சினிமா மேல உள்ள பக்தியில நடிக்க வந்திருக்கேன். அதனால கேரக்டர்களை செலக்ட் பண்ணி நடிக்கிறேன். என்னோட வாழ்க்கை ரொம்ப மார்டன்தான். அதனால வில்லேஜ் கேரக்டர்ல நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆயிரத்தில் இருவர்ங்ற படத்துல அந்த சான்ஸ் கிடைச்சிருக்கு. நல்ல கதையோட வந்த இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள்ல நடிச்சிட்டிருக்கேன்.
என்னோட திறமையை வெளிப்படுத்துற மாதிரி நல்ல கேரக்டரோடு வந்தால் நடிக்க ரெடி. என்கிறார் ரித்திகா.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment