பா.ஜ.கவில் சேர்ந்தார் ஜீவிதா
தர்மபத்தினி, கடமை, கன்னியம் கட்டுப்பாடு, பிறந்தேன் வளர்ந்தேன். இதுதாண்டா போலீஸ் உள்பட பல படங்களில் நடித்தவர் ஜீவிதா. நடிகர் டாக்டர் ராஜசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்டார். டாக்டர் ராஜசேகர் அரசியலில் பல ஆண்டுகளுக்கு முன்பே குதித்து விட்டார். கடந்த 2008ம் ஆண்டு ஆண்டு இருவரும் காங்கிரஸ் கட்சியல் இணைந்தனர். இப்போது ஜீவிதா காங்கிரசிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து விட்டார்.
ஆந்திர மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கிஷன் ரெட்டி முன்னிலையில் அவர் பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஐதராபாத்தில் பாரதி ஜனதா கட்சியின் மகளிர் பிரிவு தலைவி சுனிதா ரெட்டி தலைமையில் இந்த இணைப்பு விழா நடந்தது. அவருக்கு ஏதாவது ஒரு தொகுதியும் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment