காணாமல் போன அஞ்சலி மீண்டும் களமிறங்கினார்!
சேட்டை படத்திற்கு பிறகு தமிழ்நாட்டையே காலி பண்ணி விட்டு ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்த அஞ்சலி, அதன்பிறகு தெலுங்கில் சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் ஓடவில்லை. அதனால் அவரது மார்க்கெட் அவுட்டானது. அதோடு, அடிக்கடி அஞ்சலி காணாமல் போய் விடுவதாகவும் செய்திகள் வந்தவண்ணமிருந்தன.
அப்படி காணாமல் போகும் அஞ்சலி திடீர் திடீரென்று வெளி உலகத்துக்கு முகம் காட்டினார். இதையடுத்து, அவர் அமெரிக்காவைச்சேர்ந்த ஒருவருடன் செட்டிலாகி விட்டார் என்று வேறுவிதமாக செய்திகள் வெளிவந்தன.
அதற்கேற்ப, அஞ்சலியின் உடல்கட்டும் பூதாகரமாக பெருத்து நின்றதால் அதை அனைவரும் நம்பியாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். ஆனால். இப்போது கடந்த சில மாதங்களாக கடினமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்துக்கொண்டு மீண்டும் ஒரு புதிய தெலுங்கு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அஞ்சலி.
இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நான் அமெரிக்ககாரர் யாரையும் திருமணம் செய்யவில்லை. நான் எதிர்பார்க்கிற மாதிரியான கதைகள் அமையாததால், நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருந்தேன்.
அந்த சமயத்தில் சில வெளிநாடுகளுக்கு சென்று வந்தேன். ஆனால், இப்போது நான் எதிர்பார்ப்பது போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படம் கிடைத்திருப்பதால் மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன் என்று சொல்லும அஞ்சலி, என்னைப்பற்றி பரவும் தவறான வதந்திகளை தவிர்க்க இனிமேல் தொடர்ந்து சினிமாவில் நடித்துக்கொண்டேயிருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment