லட்சுமிமேனனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் இனியாவின் குத்தாட்டம்!

No comments
விஷாலுடன் லட்சுமிமேனன் ஜோடி சேர்ந்த முதல் படமான பாண்டியநாடு படத்திலேயே பை பை பை கலாச்சி பை என்றொரு பாடலில் கிட்டத்தட்ட குத்தாட்டம் போடுவது போல்தான் குதித்து குதித்து ஆடியிருந்தார் லட்சுமிமேனன். அந்த பாடலும் ஹிட் அடித்ததால் இனி ரொமான்டிக் பாடலாக இருந்தாலும் நாலு ஹெவியான மூவ்மென்ட் கொடுத்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் அவர். அதை மீண்டும் விஷாலுடன் நடித்து வரும் நான் சிகப்பு மனிதன் படத்திலும் பின்பற்றியிருக்கிறார் லட்சுமிமேனன். ஆனால், இதே படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் வாகை சூடவா இனியாவோ, ஒரு பாடல் காட்சியில் விஷாலுடன் அதிரடி குத்தாட்டம் போட ஓ.கே சொல்லியிருக்கிறார்.
 குடும்ப நடிகையாக வேண்டும் என்று களமிறங்கிய இனியாவுக்கு எதிர்பார்த்தபடி மார்க்கெட் இல்லாததால், கண் பேசும் வார்த்தைகள் படத்திலேயே கவர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட இனியா, இந்த படத்தில் இன்னும் தூக்கலாக கவர்ச்சி கலந்த குத்தாட்டம் போடுகிறார்.
 இந்த பாடலுக்கான ரிகர்சல் நடக்கிற விசயத்தை லட்சுமிமேனனின் காதுக்கு சொன்னவர்கள், இந்த படத்தில் இனியாவின் அட்டாக் அதிகமாக இருக்கும் போலிருக்கே என்று அவரது வயிற்றில் புளியை கரைத்து விட்டுள்ளனர். இருப்பினும், எத்தனை கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், எனது பர்பாமென்ஸ்க்கு முன்பு அவர்கள் காணாமல் போய் விடுவார்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி பேசிக்கொண்டிருக்கிறார் லட்சுமிமேனன்.

No comments :

Post a Comment