சினேகாவுக்கு தடா போடும் பிரசன்னா!
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் காதல் ஜோடிகளாக நடித்த பிரசன்னா-சினேகா இருவரும் நிஜத்திலும் காதலர்களாகிப்போனார்கள். அதன்பிறகு அவர்கள் ஜோடி சேராதபோதும் காதல் பயணம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் சினேகாவின் மார்க்கெட் சரிந்தபோது, திருமணம் செய்ய இதுதான் சரியான நேரம் எனறு இருவருமே முடிவெடுத்து காதலை பெற்றோரிடம் ஓப்பன் செய்தனர்.
இதற்கு பிரசன்னா வீட்டில் பலத்த எதிர்ப்பு. கூடவே ஜாதிப்பிரச்னை வேறு. ஆனபோதும், ஒரு வழியாக பேசி தீர்த்த பிரசன்னா-சினேகா இருவரும் இப்போது தம்பதிகளாக வளைய வருகின்றனர்.
அதோடு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த சினேகா, இப்போது வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் நாயகனாக நடித்து, இயக்கும் உன் சமையல் அறையில் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதையடுத்தும், சில படங்களில் நடிக்க தீவிரமாக பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால், பிரசன்னாவுக்கு மனைவி சினேகா தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் போதிய விருப்பம் இல்லையாம்.
அதனால், இத்தோடு நடிப்புக்கு குட்பை சொல்லி விடலாம் என்கிறாராம். ஆனால், சினேகாவோ, திருமணத்துக்கு முன்பே நான் நடித்துக்கொண்டேயிருப்பேன் என்பதை வாய்மூலம் ஒப்பந்தம் போட்டிருக்கிறேன். அதனால் அதை மதித்து நடந்து கொள்ளுங்கள் என்கிறாராம்.
ஆக, பிரசன்னாவின் தடா உத்தரவை மீறி தொடர்ந்து நடிக்கத்தயாராகிக்கொண்டிருக்கிறார் சினேகா
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment