ஆடுகளம் டாப்சியின் வில்லி அவதாரம்!
தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்சி, முதல் படத்திலேயே ரசிகர்களை அட்டாக் செய்தார் என்றபோதும், கோடம்பாக்கமே அவரை கண்டுகொள்ளவில்லை. அதனால் அதையடுத்து வந்தான் வென்றான் படத்தில் ஜீவாவுடன் நடித்தவர் பின்னர் சரியான படங்கள் இன்றி பாலிவுட்டுக்கு சென்று விட்டார்.
இந்தியில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் என நடித்து வந்தவர், அஜீத்தின் ஆரம்பம் படத்தில் ஆர்யாவுடன் நடித்தார். ஆனால், அது ஒரு சாதாரணமான துணை நடிகை நடிக்கக்கூடிய வேடம் என்பதால், அந்த ரோல் டாப்சிக்கு கைகொடுக்கவில்லை.
அதையடுத்து இப்போது லாரன்சின் முனி-3 கங்கா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே 3 படத்தையடுத்து ஐஸ்வர்யா தனுஷ், கடல் கெளதமை நாயகனாகக்கொண்டு இயக்கி வரும் வை ராஜா வை படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார் டாப்சி, எதிர்நீச்சல் ப்ரியாஆனந்த் நாயகியாக நடிக்கும் இப்படத்தில், முதலில் நட்புக்காக டாப்சியை உள்ளே இழுத்த ஐஸ்வர்யா தனுஷ், பின்னர் அவரது கேரக்டரை சற்று பெருசுபண்ணி, இப்போது கதையை நகர்த்தி செல்லும் ஒரு முக்கிய வில்லியாக்கி விட்டார்.
முதலில் நெகடீவ் ரோல் என்றதும் நடிக்கத் தயங்கிய டாப்சி, பின்னர் கதையில் தனக்கு இருந்த முக்கியத்துவத்தை உணர்ந்து ஓ.கே சொல்லி நடித்திருக்கிறாராம். அதனால் இந்த படம் மூலம் டாப்சிக்குள் இருக்கும் அதிரடி வில்லி வெளிச்சத்துக்கு வரப்போகிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment