ஹன்சிகாவுக்கு சிபாரிசு செய்யும் ஹீரோக்கள்!
நடிகர்களுக்காக ஒரு கூட்டம் தியேட்டருக்குள் வருவதைப்போன்று நடிகைகளுக்காகவும் இளைஞர் பட்டாளம் தியேட்டர்களை முற்றுகையிடுகிறது. அதனால், இப்போதைய சில ஹீரோக்கள், தங்கள் படங்களில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நடிகைகள் தங்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கும் ஹீரோக்கள் மட்டுமின்றி முன்னணியில் இருப்பவர்களும் இதை பின்பற்றுகிறார்கள்.
அந்த வகையில், தற்போது யான் படத்தில் கடல் துளசியுடன் நடித்து வரும் ஜீவா, தனது அடுத்தடுத்த படங்களில் ஹன்சிகா, காஜல்அகர்வால் போன்ற நடிகைகள் நடிக்க வேண்டும் என்று சொல்லி அப்பட டைரக்டர்களை முடுக்கிவிட்டிருக்கிறார்.
அதேபோல், ஜெயம்ரவியும் இந்த முன்னணி கதாநாயகி விசயத்தில் ஆர்வம் காட்டுகிறார்.
சமுத்திரகனி இயக்கத்தில் நடித்த நிமிர்ந்து நில் படத்தில் அமலாபாலுடன் நடித்த அவர், தற்போது நடித்து வரும் பூலோகம் படத்தில் த்ரிஷாவுடன் நடித்துள்ளார். அதையடுத்து, தனது அண்ணன் ஜெயம்ராஜா இயக்கும் தனி ஒருவன் படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்திருப்பவர், அடுத்து நடிக்கவிருக்கும் ரோமியோ ஜூலியட் என்ற படத்தில் ஹன்சிகாவுடன் இணைகிறார்.
ஏற்கனவே தனுசுடன் மாப்பிள்ளை படத்தில் நடித்த ஹன்சிகா, அப்படத்தையடுத்து பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த எங்கேயும் காதல் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, இப்போது மீண்டும் ஜெயம்ரவியுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
இப்படத்தில் புதுமுக நடிகை ஒருவரை நடிக்க வைக்க முயற்சி நடந்தபோது, ஜெயம்ரவி குறுக்கிட்டு ஹன்சிகா மாதிரி முன்னணி நடிகைகளை புக் பண்ணுங்கள். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள. அதனால் படத்தின் வெற்றிக்கு ஹன்சிகாவும் கைகொடுப்பார் என்று தனது கருத்தை சொன்னாராம. அதையடுத்தே, ஹன்சிகா என்ட்ரியாகியிருக்கிறார்.
ஜீவா, ஜெயம்ரவியைத் தொடர்ந்து ஆர்யா உள்ளிட்ட மேலும் சில ஹீரோக்களும் ஹன்சிகாவுக்கு தற்போது வெளிப்படையாக சிபாரிசு செய்யத் தொடங்கியுள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment