சொல்லியடிக்கும் விஷால்!

No comments
சுசீந்திரன் இயக்கத்தில், தான் நடித்த பாண்டியநாடு படத்தை தயாரித்து நடித்த விஷால், அப்படத்தை ஆரம்பிக்கும்போதே ரிலீஸ் தேதியையும் அறிவித்து, அதே நாளில் படத்தை வெளியிடவும் செய்தார். அதையடுத்து, இப்போது நான் சிகப்பு மனிதன் படத்தை தயாரித்து நடித்து வரும் அவர், இப்படத்தை ஏப்ரல் 11-ந்தேதி அன்று வெளியிடுகிறார். அதேபோல், அன்றைய தினமே தாமிரபரணியைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் தான் தயாரித்து, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பையும் தொடங்குகிறார் விஷால். ஏற்கனவே சூர்யாவைக்கொண்டு ஹரி இயக்கிய, சிங்கம் படத்தின் கதை எப்படி தூத்துக்குடியில் தொடங்கி சென்னையில் முடிந்ததோ, அதேபோல் இப்படத்தின் கதை கோவையில் தொடங்கி பீகார் மாநிலம் பாட்னாவில் முடிகிறதாம்.
 சிங்கம், சிங்கம்-2 படங்களை விடவும் படு விறுவிறுப்பாக இப்படத்தை இயக்கவிருக்கும் ஹரி, இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்திருக்கிறார். மேலும், சமீபகாலமாக ஸ்ருதி தான் இடம்பெறாத படங்களிலும பின்னணி பாடி வரும் நிலையில், இப்படத்தில் அவருக்கென்று ஒரு சாப்ட்டான டியூனை ரெடி பண்ணி பாட வைத்திருக்கிறாராம் யுவன்ஷங்கர்ராஜா.
 அவரைத் தொடர்ந்து விஷாலும் ஒரு பாடலை பாடவிருப்பதகாவும் கூறப்படுகிறது.

No comments :

Post a Comment