ஐ படக்குழுவை ஆச்சர்யப்பட வைத்த எமிஜாக்சன்!

No comments
மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களில் மாடர்ன் பெண்ணாக நடித்த ஹாலிவுட் நடிகை எமிஜாக்சனை, ஐ படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக மாற்றியிருக்கிறார் ஷங்கர். அர்ஜூன் நடித்த முதல்வன் படத்தில எப்படி மனீஷா கொய்ராலாவை கிராமத்து தேவதையாக மாற்றினாரோ அதேபோன்று இப்படத்தில் எமிக்கு பாவாடை தாவணி அணிந்து விட்டு அழகு பார்த்திருக்கிறார் ஷங்கர். மேலும், இந்த கிராமத்து போர்ஷனை படமாக்கும்போது விக்ரமை விட எமிதான் அதிக உற்சாகத்தில் இருந்தாராம். காரணம், தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே, தமிழ்நாட்டு கலாச்சாரத்தின்பால் ஈர்க்கப்பட்ட எமி, கிராமப்புறங்களுக்கு படப்பிடிப்புக்கு செல்லும்போது அங்குள்ள மக்களிடம் அன்பாக பழகியவர், இளவட்ட பெண்கள் அணிந்திருக்கும் பாவாடை தாவணியை ஆச்சர்யமாக பார்த்து ரசித்தாராம். 
 அதனால், அப்போதில் இருந்தே தானும் ஒரு படத்திலாவது தமிழ்நாட்டு கிராமத்து பெண்ணாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டதாம். அதையடுத்து, ஐ படத்தின் கதையை ஷங்கர் சொன்னபோது அதில் கிராமத்து கெட்டப்பில் தான் நடிக்க வேண்டும் என்றதும் செம குஷயாகிவிட்டாராம். 
அதனால் அந்த காட்சிகளை படமாக்கியபோது அதிக உற்சாகத்துடன் ஈடுபாடு காட்டி நடித்தாராம் எமி. நம்ம ஊர் பெண்களெல்லாம் பாவாடை தாவணியிலிருந்து சுடிதார், ஜீன்ஸ் என்று மாறிக்கொண்டிருக்க, ஒரு ஹாலிவுட் நடிகை நம்ம ஊர் பாவாடை தாவணி உடையணிந்து நடிப்பதை பெருமையாகவும், சந்தோசமாகவும் கருதியதை அப்படக்குழுவினர் ஆச்சர்யமாக சொல்கிறார்கள்.

No comments :

Post a Comment