வில்லேஜ் இமேஜை விடமாட்டேன்! -ரம்மி ஐஸ்வர்யா
மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி சினிமாவுக்கு வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தியில் ஓரளவு பேசப்பட்ட இவர் பின்னர் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் விஜயசேதுபதியுடன் நடித்ததால் பேசப்படும் நடிகையானார். இரண்டு படங்களிலுமே வில்லேஜ் கெட்டப்பில் நடித்ததால் இப்போது மேலும் சில கிராமத்து படங்களுக்கும அவரை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.
இந்த நிலையில், மற்ற கமர்சியல் நடிகைகளைப்போன்று கிளாமராக நடிக்கும் எண்ணம் இல்லையா? என்று ஐஸ்வர்யாவைக்கேட்டால், கவர்ச்சியாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.
ஆனால் பர்பாமென்ஸ் நடிகையாக எல்லோராலும் முடியாது. எனக்கு அந்த வாய்ப்பு ஆரம்பத்திலேயே கிடைத்திருப்பதால், இதே ரூட்டில் தொடர்ந்து பயணித்து வில்லேஜ் நாயகி என்ற இமேஜூடன் வலம்வரவே ஆசைப்படுகிறேன்.
மேலும், அதற்காக நான் சிட்டி சப்ஜெக்ட்டுகளை தவிர்க்கிறேன் என்ற அர்த்தம் அல்ல.
நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நடிப்பேன். எனது உடல்கட்டைப்பொறுத்தவரை கிளாமருக்கு பெரிதாக செட்டாகாது. அதனால் மிதமான கிளாமர் காண்பித்து, பர்பாமென்சுக்கு முதலிடம் கொடுத்து நடிப்பேன் என்று சொல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது தாய்மொழியான தெலுங்கு படங்களில் நடிக்கவும் தற்போது முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கிறாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment