இந்தியில் ரீமேக்காகும் நிமிர்ந்து நில்!
சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடித்த படம் நிமிர்ந்து நில். லஞ்சத்தை மையமாகக்கொண்டு ஷங்கர் இயக்கிய இந்தியன், அந்நியன் பட வரிசையில் இப்படத்தையும் லஞ்சத்தை மையமாகக்கொண்டு இயக்கியிருக்கிறார் சமுத்திரகனி.
இப்படம் பல ஊர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், சில தியேட்டர்களுக்கு சென்று நேரடியாக ரசிகர்களை சந்திதது வருகிறார் சமுத்திரகனி. மேலும், தனது படங்களின் வெற்றிக்கு பிறகு காங்கேயன் சிவன்மைலைக்கு சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள சமுத்திரகனி, இந்த முறையும் அந்த கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.
அதையடுத்து, தான் இயக்கும் புதிய பட வேலைகளிலும் விரைவில் இறங்க திட்டமிட்டுள்ள அவர், ஏப்ரல் 14-ந்தேதி நிமிர்ந்து நில் படத்தை தெலுங்கில் வெளியிடுகிறாராம். அதையடுத்து, அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபடப்போகிறாராம். இந்தியைப்பொறுத்தவரை முன்னணி நடிகர்தான் வேண்டும் என்றில்லாமல், எந்த நடிகர் கால்சீட் தர முன்வந்தாலும் அவர்களை வைத்து இயக்குவாராம் சமுத்திரகனி.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment