நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் சிம்பு! கோலிவுட்டில் புதிய பரபரப்பு!!

No comments
வல்லவன் படத்தில் சிம்பு-நயன்தாரா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்ததில் இருந்தே அவர்களைப்பற்றிய பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லை. காரணம், அப்படத்தில் நயனுடன் அதிக டச்சிங் கொடுத்து நடித்த சிம்பு, அவரது உதடு கவ்வி முத்தம் கொடுத்து நடித்து பெரும் பரபரப்பை கூட்டினார். அதையடுத்து, காதல், காதல் முறிவு என பலவிதமாகவும் பரபரப்புக்குள் சிக்கியிருந்த சிம்பு-நயன்தாரா ஜோடி மீண்டும், 'இது நம்ம ஆளு' படத்தில் இணைந்ததையடுத்து அவர்களைப்பற்றி தினமொரு பரபரப்பு செய்தி பரவிக்கொண்டேயிருக்கிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிம்பு நாயகனாக நடித்த எந்த படமும் திரைக்கு வராதபோதும பரபரப்பு ரீதியாக பேசப்படும் நடிகராகியிருக்கிறார்.
  இந்தநிலையில், எரியுற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் விதமாக, தற்போது நயன்தாராவின் கழுத்தில், சிம்பு தாலி கட்டுவது போன்று ஒரு காட்சியை படமாக்கியுள்ளாராம் பாண்டிராஜ். இதற்கு முன்பு ராஜாராணியில் ஆர்யா-நயன்தாராவுக்கு திருமணம் நடந்தது போன்று வினோதமான முறையில் பப்ளிசிட்டி செய்ததைப்போன்று, இப்போது இது நம்ம ஆளு படத்துக்காகவும் சிம்பு-நயன்தாராவுக்கு திருமணம் நடந்தது போன்று ஒரு செய்தியை வெளியிட்டு பரபரப்பு கூட்ட திட்டமிட்டுள்ளார்களாம்.

No comments :

Post a Comment