காங்கிரஸ் எம்.எல்.ஏ முத்தமிடவில்லை: நக்மா மறுப்பு!
முன்னாள் தமிழ் பட ஹீரோயின் நக்மா தற்போது காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவர். கவர்ச்சியான தலைவராகவும் வலம் வருகிறார். வருகிற பாராளுமன்ற தேர்லில் அவர் உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தொகுதியில் உள்ள ஹாபூர் என்ற இடத்தில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்கச் சென்றார். அப்போது ஹாபூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ கஜராஜ் நக்மாவை காருக்கு வழியனுப்பச் சென்றபோது அவரது முகத்தை தன் கையால் இழுத்து முத்தமிட்டார். இந்தக் காட்சி வீடியோவாக வெளியானது. இது பற்றி பெரும் சர்ச்சை எழுந்தது.
கஜராஜை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று உள்ளூர் காங்கிரசார் போர்க்கொடி தூக்கினர். இப்போது இந்த பிரச்சினைக்கு நக்மாவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எம்.எல்.ஏ கஜராஜ் என்னை முத்தமிடவில்லை. நான் நடிகை என்பதால் மீடியாக்கள் அதை முத்தம் என்று பெரிது படுத்தி எழுதிவிட்டன.
அங்கு நல்ல கூட்டம் இருந்ததால் அவர்தான் என்னை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். போகும் வழியில் ஒரு தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு போங்கள் என்பதை அவர் என் காதருகில் சொன்னார். கூட்டமும், சத்தமும் அதிகமா இருந்ததால் அப்படிச் சொல்ல வேண்டிய நிலை அவருக்கு. மேலும் நான் அப்போது தலையில் முக்காடு அணிந்திருந்தேன். அவர் என்னை தன் பெற்ற மகள் போல் பார்க்ககூடியவர் என்று கூறியுள்ளார்.
கஜராஜா நக்மாவை முத்தமிட்டது உண்மைதான்.
அவர் தன் தலையை பிடித்த கஜராஜாவின் கையை வேகமாக அகற்றியதை வைத்து இதனை உறுதி படுத்ததலாம். அவர் இதுகுறித்து காங்கிரஸ் மேலிடத்தில் புகார் செய்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் இதை பெரிது படுத்தினால் கட்சி இமேஜ் பாதிக்கப்பட்டு அது உங்கள் வெற்றியையும் பாதிக்கும் அதனால் மவுனமாக இருங்கள் தேர்தலுக்கு பிறகு அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று மேலிடம் தெரிவித்ததை தொடர்ந்து நக்மா இவ்வாறு கூறியிருப்பதாக அரசியல் பார்வையளர்கள் கூறுகிறார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment