ரஜினியை வைத்து அடுத்த ஆட்டம் ஆரம்பம்!
கோச்சடையான் படம் மே முதல் தேதி வெளியாவதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியானதும், ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கப்போவது யார் என்று அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்து விட்டனர். கோச்சடையான் படம் துவங்குவதற்கு முன்பிருந்தே ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிகுமார் ஒரு படம் இயக்க இருக்கிறார் என்ற தகவல் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு, ஒளிப்பதிவாளர் கேவி.ஆனந்த் சொன்ன கதையில் இம்ப்ரஸ் ஆன ரஜினி, அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார். அந்தப் படத்தை கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார் என்று சொல்லப்பட்டது.
சில மாதங்கள் பரபரப்பாக இச்செய்தி அடிபட்டநிலையில், தனுஷை வைத்து கே.வி.ஆனந்த் அனேகன் என்ற படத்தை ஆரம்பித்த பிறகு அப்படியே அமுங்கிப்போனது.
கே.எஸ்.ரவிகுமார், கே.வி.ஆனந்ததைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கப்போகிறார் என்ற செய்தியில் அடிபட்டவர் - ஷங்கர். தற்போது ஐ படத்தை இயக்கி வரும் ஷங்கரை ரஜினியே தேடிப்போய் அடுத்தப்படத்தை இயக்க அழைத்ததாகவும் உடனடியாய் அதற்கு ஷங்கர் உடன்பட்டதாகவும் அப்போது சொல்லப்பட்டது.
ரஜினி - ஷங்கர் இணையும் படத்துக்கு 250 கோடி செலவாகும் என்பதால், கல்பாத்தி அகோரத்தை அணுகினார்கள் என்றும், 140 கோடி வரை என்றால் தயாரிக்கிறேன், அதற்கு மேல் என்றால் என்னால் முடியாது என்று அவர் விலகிக்கொண்டதாகவும் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் கோச்சடையான் படத்தில் டைரக்ஷன் சூப்ரவைசராக பணியாற்றியபோது கே.எஸ்.ரவிகுமார், ரஜினிக்கு ஒரு கதை சொன்னதாகவும், அக்கதை ரஜினிக்குப் பிடித்துப்போனதால் அடுத்தப்படமாக அதை பண்ண முடிவு செய்துவிட்டார் ரஜினி என்று இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் - திரையுலகில். அதுமட்டுமல்ல, ரஜினியின் ஒப்புதலோடு அனுஷ்காவிடம் கால்ஷீட் கேட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment