சந்தானத்தைக் கழற்றிவிட்ட ஹரி! காரணம் என்ன?

No comments
விஷாலை வைத்து ஹரி இயக்கும் பூஜை படத்தில் சந்தானத்துக்கு இடமில்லை. படத்தின் பிரதான காமெடியனாக சூரியை ஒப்பந்தம் செய்திருக்கிறார். சிங்கம் - 2 படத்தில் சந்தானம்தான் காமெடியனாக நடித்தார். அப்படத்தில் இடம்பெற்ற அவரது காமெடி சிங்கம்-2 படத்தின் வெற்றிக்கும் பெரிதும் உதவிகரமாக அமைந்தது. அப்படி இருந்தும் தன் அடுத்தப்படமான பூஜையில் சந்தானத்துக்கு கல்தா கொடுத்துவிட்டாரே ஹரி? என்ன காரணம்? என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் இதோ... சிங்கம் -2 படத்தில் நடித்தபோது இயக்குநர் ஹரியை அநியாயத்துக்குப்படுத்தி எடுத்துவிட்டாராம் சந்தானம்.
+ சொன்ன நேரத்தில் படப்பிடிப்புக்கு வராமல் இருந்தது, காமெடி வசனங்களை என் குழுவினரை வைத்துத்தான் எழுதுவேன் என்று கண்டிஷன் போட்டது, படத்தின் புரமோஷனுக்கு அழைத்தும் வராமல் முரண்டு பிடித்தது என்று சந்தானம் கொடுத்த டார்ச்சரினால் ஏகத்துக்கும் ஹரிக்கு பிபி எகிறியிருக்கிறது. 
 அப்போது சூர்யாவின் ஆதரவும் சந்தானத்துக்கு இருந்ததால் ஹரியால் அப்போது தன் எதிர்ப்பைத் தெரிவிக்க முடியவில்லை. அதனால் சந்தானம் விஷயத்தில் அப்போது தன் கடுப்பை கட்டுப்படுத்தி வைத்திருந்தவர் இப்போது பூஜை படத்தில் சூரியை காமெடியனாக்கிவிட்டார். பூஜை படத்தில் சந்தானத்தை கழற்றிவிட்டு சூரியை ஒப்பந்தம் செய்ததற்கு விஷாலின் பரிபூரண ஆசியும் உண்டாம்.

No comments :

Post a Comment