கோச்சடையான் படம் மே 1 ஆம் தேதி வெளியாவது உறுதி!

No comments
சில தினங்களுக்கு முன் தணிக்கைக் குழுவினருக்கு கோச்சடையான் படத்தை திரையிட்டுக்காட்டினார் சௌந்தர்யா ரஜினிகாந்த். படத்தைப் பார்த்தத் தணிக்கைக் குழுவினர் கோச்சடையான் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால்… கோச்சடையான் படத்தின் ரீ ரெக்கார்டிங் பணியே இன்னும் தொடங்கப்படவில்லை. ஏப்ரல் மாதம்தான் தொடங்கப்படவிருக்கிறது. கோச்சடையான் படத்தின் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் இறுதிக்கட்ட பணிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை விரைந்து முடித்து அவுட்புட்டை வாங்கி வருவதற்காக சீனாவுக்குச் சென்றிருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். சீனாவிலிருந்து அவர் வந்த பிறகே ரீ ரெக்கார்டிங் பணிகளை தொடங்க இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இந்தநிலையில் கோச்சடையான் படத்துக்கு எப்படி தணிக்கை சான்றிதழ் கிடைத்தது என்பதுதான் திரையுலகில் பலரும் கேட்கும் கேள்வியாக இருக்கிறது.
 தணிக்கையின்போது கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அதனால் கோச்சடையான் படத்தின் வெளியீட்டில் சிக்கல் வரக்கூடாது என்று நினைத்தாராம் ரஜினி. எனவே முன் எச்சரிக்கை காரணமாக டம்மியாக ஒரு மியூஸிக் ட்ராக்கைப் பயன்படுத்தி தணிக்கைக் குழுவினருக்கு கோச்சடையான் படத்தைப் போட்டுக்காட்டினார்களாம். 
 கோச்சடையான் படத்தின் ரிலீஸ் பற்றி லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா? மே 1 ஆம் தேதி படம் வெளியாவது உறுதி. தியேட்டர்களை புக் பண்ண ஆரம்பித்துவிட்டனர்.

No comments :

Post a Comment